ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வகையில், சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க 24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால், திருமழிசையில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கிய அந்த இடத்தில், தற்போது தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் குறித்து, சிஎம்டிஏ உயர் அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சிஎம்டிஏ தலைமை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு தொழிலாளர்களை ஆந்திராவுக்கு பணிக்கு அழைத்துச் செல்ல அனுமதி!