சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக, 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வரச் சொல்லி அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பில், அதிமுகவின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான, பன்னீர் செல்வம் தன் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வரச் சொல்லியுள்ள நிலையில், பன்னீர்செல்வத்தின் இந்த சந்திப்பும், தேனி பயணமும் அவரது ஆதரவாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ரஜினியை முதலமைச்சராக்க உழைப்போம் - தமிழருவி மணியன்