ETV Bharat / city

லீக்கான வினாத்தாள் விவகாரம்: விசாரணை தொடக்கம் - 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு

10, 12ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளிக் கல்வித்துறை இன்று (பிப். 14) தனது விசாரணையை தொடங்கியது.

department of education
பள்ளிக் கல்வித்துறை விசாரணை
author img

By

Published : Feb 14, 2022, 11:24 AM IST

சென்னை: 10, 12ஆம் வகுப்புகளின் திருப்புதல் தேர்வுக்குரிய கணிதம் மற்றும் அறிவியல் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று (பிப். 14) காலை 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு தொடங்கியது. வினாத்தாள் வெளியானதால், இன்றைய தினம் நடைபெறும் திருப்புதல் தேர்வுக்குரிய வினாத்தாள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினாத்தாள் மாற்றப்படாமல் அதே வினாத்தாளைக் கொண்டே தற்போது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், மதியம் நடைபெற இருக்கும் 12ஆம் வகுப்புக்கான கணித வினாத்தாளும் முன்னரே வெளியாகிவிட்டது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பிப்.9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் விசாரணை

இந்நிலையில், வினாத்தாள் வெளியாக உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டது. இதனிடையே, வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியானதாக தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து அரசுத் தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குநர் பொன்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ரயில்வே பணியாளரிடம் வழிப்பறி: சிசிடிவியில் சிக்கிய மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.