சென்னை: அரசுப் பள்ளிகளில் செய்முறை வகுப்புகளுக்கான பொருள்களைக் கொள்முதல் செய்ததில் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க கல்வித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் தலைமை ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு காசோலை அளிக்குமாறு வற்புறுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.