சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
அதனடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில், 32 பள்ளிகளின் கட்டடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டடத் துறை அலுவலர்கள் 32 பள்ளிகளிலும் ஆய்வு செய்து, இரண்டு நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில், எத்தனை கட்டங்கள் இடிக்கப்படும் என்றும் வரும் நாள்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: கோவையில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்