ETV Bharat / city

மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் - 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்! - ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Delay
Delay
author img

By

Published : Jul 6, 2022, 6:31 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் 4 ஆயிரத்து 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 33 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தொடங்க மூன்று மாதங்களே உள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால், இப்பணிகளை மேற்கொண்டு வரும் எட்டு ஒப்பந்ததாரர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்திற்காக இரண்டு நிறுவனங்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.120.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.