சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி, முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில், திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர், பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், எம்.பி., ஆனதால் அவர் மீதான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .
இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு இன்று(ஏப்ரல் 12) நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் தீக்குளித்த லாரி ஓட்டுநர் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு!