சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 31) 937 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் திருச்சியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு ஆய்வகம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 237 ஆய்வகங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
மேலும் 68 ஆயிரத்து 415 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 930 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 4 பேருக்கும், பிகார், ஒடிஸாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 937 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 38 லட்சத்து 28 ஆயிரத்து 135 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 14 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 8501 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 38 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 7 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 6 நோயாளிகளும் என 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,122ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு வந்த 2300 பயணிகளில், 1936 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 24 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1853 நபர்களுக்கு வைரஸ் நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நபர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்திலிருந்து வந்த 24 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,25,507
- கோயம்புத்தூர் - 52,336
- செங்கல்பட்டு - 50,029
- திருவள்ளூர் - 42,650
- சேலம் - 31,586
- காஞ்சிபுரம் - 28,703
- கடலூர் - 24,681
- மதுரை - 20,532
- வேலூர் - 20,220
- திருவண்ணாமலை - 19,147
- தேனி - 16,895
- தஞ்சாவூர் - 17,178
- திருப்பூர் - 17,055
- விருதுநகர் - 16,344
- கன்னியாகுமரி - 16,339
- தூத்துக்குடி - 16,072
- ராணிப்பேட்டை - 15,911
- திருநெல்வேலி - 15,294
- விழுப்புரம் - 14,995
- திருச்சிராப்பள்ளி - 14,183
- ஈரோடு - 13,676
- புதுக்கோட்டை - 11,404
- கள்ளக்குறிச்சி - 10,800
- திருவாரூர் - 10,932
- நாமக்கல் - 11,203
- திண்டுக்கல் - 10,945
- தென்காசி - 8,263
- நாகப்பட்டினம் - 8,151
- நீலகிரி - 7,945
- கிருஷ்ணகிரி - 7,878
- திருப்பத்தூர் - 7,444
- சிவகங்கை - 6,535
- ராமநாதபுரம் - 6,322
- தருமபுரி - 6,412
- கரூர் - 5,170
- அரியலூர் - 4,634
- பெரம்பலூர் - 2,256
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 930
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1026
- ரயில் மூலம் வந்தவர்கள் 428