ஜம்மூ காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 விழுக்காடு வாக்குகள் பதிவானது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெறவுள்ளது.

அலிகர் பல்கலைக்கழகத்தில் மோடி உரை
அலிகர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

புதுச்சேரியில் மத்திய தேர்தல் குழு
அடுத்தாண்டு(2021) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய தேர்தல் ஆணைக் குழு இன்று புதுச்சேரி வருகிறது.

விழுப்புரத்தில் பரப்புரை
இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரைத் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று விழுப்புரத்தில் தனது பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

மகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு அமல்!
இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரை சந்திக்கும் திமுக தலைவர்
திமுக தலைவர் ஸ்டாலின், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கவுள்ளார்.
