ETV Bharat / city

'தீபாவளிக்கான ஆவின் இனிப்புகளை விலை கொடுத்து வாங்குங்கள்!'

தீபாளிக்கான ஆவின் இனிப்புகளை விலை கொடுத்து வாங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து ஆவின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் எனப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆவின் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.

dairy minister nasar statement
dairy minister nasar statement
author img

By

Published : Oct 14, 2021, 10:30 AM IST

சென்னை: சா.மு. நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர்களிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் விற்பனை மற்றும் பால் உபபொருட்கள் இனிப்புகள் விற்பனை குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது:

தீபாளிக்கான ஆவின் இனிப்புகளை விலை கொடுத்து வாங்குங்கள். கரோனா தொற்று காரணமாக நம்மிடையே நேரடி தொடர்பு இல்லாமல், தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொண்டு பேசி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். எனவே நாம் அனைவரும் இணைந்து ஆவின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்

இந்திய அளவில் ஆவினுக்கென்று தனி மரியாதை உண்டு. கடந்த 10 ஆண்டுகளாக ஆவின் சந்தித்த நஷ்ட நிலைமைகள் இங்கு வந்துள்ள பொது மேலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். பொதுமக்களுக்கும் தெரியும். தலைமை சரியாக இருந்தால்தான் எதுவும் சரியாக இருக்கும். அந்த வகையில் முதலமைச்சர் பொதுமக்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு எவ்வளவு நிதி நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

எனவே மக்களின் எண்ணங்களை அறிந்து, தெரிந்து, உடனுக்குடன் செயல்படுபவர் மு.க. ஸ்டாலின். இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை அன்பளிப்பு என்று எவரும் எதிர்பார்க்காமல் விலை கொடுத்து வாங்க வேண்டும். நான் பணம் கொடுத்துதான் தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின்போது வாங்கினேன்.

அதுபோல இங்குள்ள மேலாண்மை இயக்குநரும், வந்துள்ள அனைத்து பொது மேலாளர்களும் ஆவின் பொருட்கள் ஒவ்வொன்றையும் விலை கொடுத்து வாங்குவதுடன், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்.

குறிப்பாக சென்னையில் மட்டும் அசோக் லேலாண்ட் நிறுவனம் இனிப்புகளை வாங்குவார்கள், ஆனால் இந்தாண்டு ஒசூரிலும் கூடுதலாக இனிப்புகள் வாங்கியுள்ளனர். காரணம் ஆவினில் தயாரிக்கப்படும் சுவை மிகுந்த இனிப்புகள். கடந்த ஆட்சிக் காலத்தில் இனிப்புகள் வழங்கியதில் நடந்த தவறுகள் இந்தாண்டு இப்போது நடைபெறவே கூடாது.

அதனைப் பற்றிய விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே முதலமைச்சர் ஒவ்வொரு துறையிலும் துறை ரீதியாக அறிவிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்றும், எதிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றார்.

அந்த வகையில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட நிலையிலும், அடுத்து வரும் வாரங்களில் பால்வளத் துறை குறித்து ஆய்வுமேற்கொள்ளவுள்ளார். தற்போது தீபாவளியை முன்னிட்டு ஆவின் இனிப்புகள், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் பவுடர் விற்பனை, விற்பனை செய்ய பெறப்பட்டுள்ள நெய், வெண்ணெய், பால்கோவா, பால் பவுடரில் இருப்பு தேவை என்னும் பட்டியலின் விவரம், விற்பனை செய்ய எத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளன.

மக்கள் கூடும் இடங்களில் 2021ஆம் ஆண்டிற்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்ய ஸ்டால்கள் அமைப்பதில் உள்ள இடர்ப்பாடுகள் பற்றிய விவரங்கள் இருந்தால் அதை எந்தத் தயக்கமும் இன்றி கூற வேண்டும். மேலும் ஆவின் இனிப்புகள் விற்பனை மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் குறித்தும் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.