ETV Bharat / city

அரசியல் தலைவர்களிடம் பணம் மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு - காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து சிறையிலுள்ள நபரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

பணம் மோசடி செய்தவர்
பணம் மோசடி செய்தவர்
author img

By

Published : Oct 1, 2021, 7:02 PM IST

சென்னை: திமுக பிரமுகரான வழக்கறிஞர் ஜோயலைத் தொடர்புகொண்ட சிவக்குமார் என்பவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி புகைப்படம், மருத்துவச்சீட்டை அனுப்பி பண உதவி கேட்டுள்ளார். குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தங்களிடம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய ஜோயல் அவரது வங்கிக் கணக்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினார். இது குறித்து உதயநிதியிடம் விசாரித்ததில், தான் யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஜோயல், இந்த மோசடி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அரசியல் பிரமுகர்களிடம் பணம் மோசடி

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி புதுச்சேரியைச் சேர்ந்த சிவக்குமாரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு குழந்தையின் புகைப்படம், மருத்துவச்சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவர் மோசடி செய்வதற்குப் பயன்படுத்திய செல்போன்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து சிவக்குமாரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் மோசடி செய்திருப்பதால் சைபர் கிரைம் காவல் துறையினர் சிவக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளனர்.

தீவிர விசாரணை நடத்த சைபர் கிரைம் முடிவு

இதேபோன்று எத்தனை நபரிடம் சிவக்குமார் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளனர். குறிப்பாக சிவக்குமார் தனது மனைவியின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், மோசடி செயலுக்குப் பயன்படுத்திய வங்கிக் கணக்கை சைபர் கிரைம் முடக்கியுள்ளனர்.

மேலும், மோசடி செய்த பணத்தை ரம்மி விளையாட்டு மூலம் இழந்ததாக சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ள தகவல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தவும், மோசடி செய்த பணத்தைப் பதுக்கிவைத்துள்ளாரா எனவும் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளை ஏமாற்றிய பலே கில்லாடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.