ETV Bharat / city

பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு! - மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: விசாரணைக்கு அழைத்துச் சென்று காவலர்கள் கொடுமைப்படுத்தியாக அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

rights
rights
author img

By

Published : Jun 16, 2020, 6:09 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையை ஆதிலட்சுமி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவரையும், அவரது மகனையும் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவலர்கள் பிரவீன் குமார், அனுராதா ஆகியோர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆதிலட்சுமி புகார் அளித்திருந்தார்.

இப்புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பிரச்னையில், ஆதிலட்சுமிக்கு தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஆதிலட்சுமியை அழைத்துச் செல்லும் போது பெண் காவலர்களை வைத்து அழைத்து செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவர்கள் மிரட்டப்பட்டு மருத்துவ அறிக்கைகள் திருத்தப்பட்டிருப்பதும் மனித உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய அவர், பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட ஆதிலட்சுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இழப்பீட்டுத் தொகையை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவலர் பிரவீன்குமார் மற்றும் பெண் காவலர் அனுராதா ஆகியோரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளவும் அரசுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: மருந்துப் பொருள்களின் தரம்: அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.