ETV Bharat / city

மே 2 அன்று முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழ்நாடு ஊரடங்கு

curfew on may 1 in tamilnadu
curfew on may 1 in tamilnadu
author img

By

Published : Apr 29, 2021, 1:30 PM IST

Updated : Apr 29, 2021, 2:37 PM IST

13:22 April 29

சென்னை: தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி, முழு ஊரடங்கை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், மே ஒன்றாம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த தேவையில்லை எனவும் உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருக்கும் விளக்க அறிக்கையில், “மே ஒன்றாம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

மே 1 விடுமுறை நாள் என்பதால் பாதிப்பு இருக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கவுள்ளதால் அவர்களைத் தடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையில் மே ஒன்றாம் தேதி ஊரடங்கு அறிவிப்பதா, வேண்டாமா என அரசே முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி, முழு ஊரடங்கை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Apr 29, 2021, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.