சென்னை: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று (ஜூலை 5) நூதன முறையில் சமைக்காத உணவுகளை பச்சையாக உண்டு சமையல் கலை தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்போது பேசிய தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இனியவன், "வர்த்தக ரீதியாக பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ. 80 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் பண்டைய கால மனிதர்களை போல உணவுகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்த்தும் விதமாக சிலிண்டர் மாதிரியை வைத்து பச்சை உணவுகளை சாப்பிட்டு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றோம்.
எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும்" வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கும் மிகாமலும் வர்த்தக ரீதியாக பயன்படுத்தக் கூடிய எரிவாயு சிலிண்டர் ரூ. 800-க்கும் மிகாமலும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சமையல் கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.