ETV Bharat / city

உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழக அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் தோற்றுப்போய் விட்டன - இரா. முத்தரசன்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் தோற்றுப்போய் விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

mutharasan
mutharasan
author img

By

Published : Dec 6, 2019, 6:58 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று சந்தித்து பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
அதிமுக அரசு 2016 முதல் உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டு நடத்தாமல் தள்ளிவைத்து கொண்டே வந்தது. முறையாக இடஒதுக்கீடு செய்யாமலும், வார்டு வரையறை செய்யாமலும் தேர்தல் தேதியை அறிவித்தது உள்ளிட்ட இந்த முறைகேடுகளையெல்லாம் களையவே திமுக வழக்கு தொடர்ந்தது என்பது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டுமெனில், முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, வார்டு மறுவரையறை செய்துதான் நடத்தவேண்டும். இதுவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றத்தின் இந்தத்தீர்ப்பு மூலம் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் தோற்றுப்போய் இருக்கின்றன “ என்று முத்தரசன் தெரிவித்தார்.மேலும்,

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட திஷா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் காவல்துறையினர் என்கவுண்டர் செய்திருப்பது ஏற்புடையதல்ல. எந்தக் குற்றமாக இருந்தாலும் நீதிமன்றம் மூலமே தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: தேர்தல் ஆணையம்!

Intro:Body:உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தோற்றுப்போய் இருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் என தெரிவித்தார்

தொடர்ந்து அவர் பேசுகையில்,
2016 முதல் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்தாமல் 3 ஆண்டுகளாக பொருத்தமான காரணங்களை கூறாமல் தள்ளிவைத்து கொண்டே வந்தது ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலையிட்டின் காரணமாக நெருக்கடியான நிலையில் முறையாக இடஒதுக்கீடு செய்யாமலும் வார்டு வரையறை செய்யாமலும் தேர்தல் தேதியை அறிவித்தது இவற்றையெல்லாம் களையவே திமுக வழக்கு தொடர்ந்தது தீர்ப்பு மூலம் இதனை நீதிமன்றம் உறுதி படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் எனில் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது வார்டு மறுவரையரை செய்து தான் நடத்தவேண்டும் இதுவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக கூட்டணியின் நிலைப்பாடு.

அதிமுக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை எனவே தான் காலத்தை தாழ்த்திவந்தனர்

இந்த தீர்ப்பு மூலம் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தோற்றுப்போய் இருக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவழிகளையும் போலீசார் என்கவுண்டர் செய்துள்ள சம்பவம் ஏற்புடையதல்ல எந்த குற்றமாக இருந்தாலும் நீதிமன்றம் மூலமே தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.