ETV Bharat / city

'தமிழ்நாட்டிற்கு பயன்தரும் எதுவும் பட்ஜெட்டில் இல்லை' - இ.கம்யூ., விமர்சனம்!

சென்னை: தமிழ் நாட்டிற்கான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், கஜா, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண ஒதுக்கீடு என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

cpi
author img

By

Published : Jul 5, 2019, 11:53 PM IST

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலோ, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையிலோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலோ அமையவில்லை.

60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும், விவசாயக் கடன் ரத்து செய்வது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்து வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் காப்பீட்டுத்துறையில 100 சதவிகித அந்நிய முதலீட்டு, விமானத்துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டு க்கு அனுமதி அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை சரிக்கட்டுவது போன்ற தவறான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தில் மேலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். பெட்ரோல் - டீசல் மீது சாலை மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.1 வரி விதித்துள்ளது சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

தமிழகத்திற்கான புதிய ரயில்கள் மற்றும் ரயில் வழிப்பாதைகள், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், கஜா புயல், ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படாததது தமிழகத்தை வஞ்சிப்பதாகும். மொத்தத்தில் பாஜக அரசு, மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மை' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Intro:Body:நாட்டின் 17-வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இரண்டாம் ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளது. திரு மோடியின் பாஜக மத்திய அரசின் பெண் நிதியமைச்சர் 2019, -20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (05.07.2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவ தாராளமயக் கொள்கையினால் உருவாகி வரும் ஏற்றத்தாழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திசை வழியில் நிதிநிலை அறிக்கை அமையவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த சொத்துக்களில் 77.40 சதவீதம் 10 சதவீதத்தினரிடம் குவிந்துள்ளது. அடுத்த 60 சதவீதத்தினரிடம் வெறும் 04.07 சொத்துக்களே இருக்கின்றன. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு போக்கு சமூக அமைதிக்கு உதவாது என்பதை நிதியமைச்சர் கருத்தில் கொள்ளவில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.5 முதல் 4 சதவீதம் வரை உள்ள நிலையில் நிதிநிலை அறிக்கை 7 சதவீத வளர்ச்சி இருப்பதாக் கூறுவது சரியல்ல என பொருளாதார ஆலோசகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் வேளாண்மை தொழிலின் நெருக்கடிக்கு தீர்வு காண நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தவில்லை. நாட்டின் உணவுதானிய உற்பத்தியை தன்னிறைவு நிலைக்கு உயர்த்திய விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன், கூடுதலாக 50 சதவீதம் சேர்த்து குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை பரிசீலிக்கபடவில்லை. விவசாயிகள் தற்கொலை சாவுகளுக்கு முக்கிய காரணமான ‘கடன் சுமை’யை நீக்க முன்வரவில்லை. வேளாண்மைத்துறையில் தனியார் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று கூறி குழும நிறுவனப் பண்ணைகள் அமைப்பதை நிதிநிலை அறிக்கை அனுமதிக்கிறது.

‘அல்வா’ தயாரித்து நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சரிடம்.தொழில் மற்றும் தொழிலாளர் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னுரிமை கடமைகளை மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு தெரிவித்தன. இதனை நிராகரித்து விட்ட நிதியமைச்சர், பல்வேறு வகையில் பயனளிக்கும் தொழிலாளர் சட்டங்களை நீக்கி விட்டு, வெறும் 4 நெறிக்கோடுகளாக மாற்றுவதில் உறுதி காட்டுகிறது.இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துக் கொண்டு, அவர்களை மூலதனத்தின் அடிமைகளாக்க முயற்சிக்கிறது.

நாட்டின் பொருளாதார கட்டமைப்பின் அரணாக விளங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிதிநிலை அறிக்கை அனுமதிக்கிறது.

ஒரு நாடு, ஒரு தேர்தல்; ஒரே நாடு, ஒரு கல்வி; ஒரே நாடு, ஒரு மின்சாரம் ;ஒரே நாடு, ஒரு ரேஷன்; ஒரே நாடு, ஒரு கலாச்சாரம் என்ற அணுகுமுறையை தீவிரமாக அமலாக்கி, மாநில உரிமைகளை பறிக்கும் செயலுக்கு நிதிநிலை அறிக்கை பச்சைக் கொடி காட்டுகிறது.

தொன்மை தமிழ் இலக்கிய படைப்பான ‘புறநானூற்றை’ தனது வாதத்திற்கு பயன்படுத்திக் கொண்ட நிதி அமைச்சர் தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம், நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் ரயில்வே வசதி திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தோ, உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைளோ நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பாஜக மத்திய அரசு இதுவரை ஆண் குரலில் செய்து வந்த வாய்ச்சவடால் இப்போது பெண் குரலுக்கு மாற்றப்பட்டிருப்பது தவிர மக்களுக்கு பயனளிக்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை. இது வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துக் கொள்கிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.