ETV Bharat / city

சென்னையில் பரிதாபம்.. அறுந்து கிடந்த மின்வயர்.. உயிரிழந்த பசு மாடுகள்

சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி பசு மாடுகள், கன்றுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்த மாடுகள்
மின்சாரம் தாக்கி இறந்த மாடுகள்
author img

By

Published : Nov 18, 2021, 4:58 PM IST

சென்னை: மேடவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (80). இவர் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று (நவ.18) காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பியிருந்தார். அப்போது மேடவாக்கம் பாபு நகர், ரவி பிரதான சாலையில் மின் கம்பியில் அறுந்து விழுந்து கிடந்தன.

இந்த இடத்தை கடந்து செல்ல முயன்ற மூன்று பசுக்கள், இரண்டு கன்றுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துகிடந்த மாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரிலிருந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து அங்கு வந்த மேடவாக்கம் கால்நடைத்துறை மருத்துவர் மைதிலி இறந்த மாடுகளுக்கு உடற்கூராய்வு செய்தார். இதனையறிந்த சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சார வயர் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு மாடு உரிமையாளர்க்கு ஆறுதல் கூறினார்.

நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மக்கள்

மேலும் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, அறுந்து கிடந்த வயரை சரி செய்து அப்பகுதிக்கு விரைந்து மின்சாரம் வழங்க மின்வாரிய அலுவலர்களிடம் கூறினார். மின்சார வயர் அறுந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக அப்பகுதி மக்கள் யாரும் செல்லவில்லை.

உயிரிழந்த மாடுகள்

ஆனால், வாயில்லா ஜீவன் மாடுகள் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து, மின்சாரம் தாக்கிய மாடுகள் உயிரிழந்துள்ளதால் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து மாடுகளின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இரும்புக் கதவிற்கு வெல்டிங் வைத்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.