ETV Bharat / city

கரோனா விதிகளை மீறியோரிடம் ரூ.13 லட்சம் அபராதம் வசூலிப்பு - கரோனா

சென்னை: கரோனா விதிமுறைகளை மீறுவோரிடமிருந்து இதுவரை 13 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

secretary
secretary
author img

By

Published : Sep 14, 2020, 4:10 PM IST

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

”ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் 10ஆம் நாள்கள் குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்தாண்டு கரோனா பாதிப்பு காலம் என்பதால், முகாம் செப்டம்பர் 14 முதல் 28ஆம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறும். இதில், 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதிற்கு மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். இந்தச் சிறப்பு முகாமில் அங்கன்வாடி, நல்வாழ்வுத் துறை, ஆஷா பணியாளர்கள் மொத்தம் 54,439 பேர் ஈடுபடுத்தப்படுவர்.

நீட் பற்றி பேச திமுக, காங்கிரசுக்குத் தார்மீக உரிமை இல்லை. நீட் என்ற சொல்லே மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் விதைக்கப்பட்டது. ஆனால், மக்களையும், மாணவர்களையும் திசை திருப்புவதற்காக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்துவருகின்றன“ எனத் தெரவித்தார்.

தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொற்றுநோய் சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாத, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள், நிறுவனங்களிடமிருந்து இதுவரை, 13 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: மாணவர்கள் நலனை குழி தோண்டி புதைத்த திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.