ETV Bharat / city

'தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் மூலம் மட்டுமே பரிசோதனை' சுகாதாரத்துறை செயலாளர் தகவல்! - சென்னை அண்மைச்செய்திள்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் மூலம் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனை முறைதான் சரியாக உள்ளது. வைரஸ் தொற்று உருமாறியுள்ள நிலையில், பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று இல்லை என வந்தாலும், அவரின் நோய் அறிகுறிகளை வைத்து வைரஸ் தொற்றை உறுதி செய்கிறோம் என, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

covid-test-only-through-rtpcr-in-tamil-nadu

author img

By

Published : May 20, 2021, 6:49 AM IST

Updated : May 24, 2021, 1:56 PM IST

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டு, கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது பெரும் நோய்த்தொற்றான கரோனா. இத்தொற்றின் பரவல், இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது. நோய்த் தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே, அதாவது 2020 மார்ச் மாதத்தில் இருந்தே தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திலிருந்து முதலில் குறைந்தளவிலான பரிசோதனை மையங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, 69 அரசு பரிசோதனை மையங்கள், 198 தனியார் பரிசோதனை மையங்கள் எனத் தற்போது 267 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் மே 18ஆம் தேதி வரையில், 2 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரத்து 956 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்பொழுது கரோனா தொற்றின் 2 ஆவது அலையில், தொற்றை உண்டாக்கும் வைரஸ் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் அதிக நாட்கள் தங்கியிருக்காமல் நேரடியாக நுரையீரலைச் சென்று தாக்குகிறது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சுயமாக மருத்துவம் பார்த்து விட்டு, நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தப் பின்னர் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இதனால் பரிசோதனையில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய முடிவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அப்போது நோயாளிக்கு உள்ள அறிகுறிகளின் அடிப்படையில் சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தால் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிய முடிகிறது.

தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் மூலம் மட்டுமே பரிசோதனை

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிஎம்கே ரெட்டி கூறியதாவது, "கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைத் தான் சரியாக இருக்கிறது. தொற்றைக் கண்டறிய பிற பரிசோதனைகள் இருந்தாலும், அவற்றில் துல்லியமாகக் கண்டறிய முடிவதில்லை.

பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கும் போது சிறியளவில் தவறு நடந்தாலும் சரியான முடிவு கிடைக்காது. அதனால் அவர்களுக்கு அதனுடன் தொடர்புடைய பிறப் பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவு செய்கிறோம்.

தற்போது 2ஆவது அலையில் கரோனா வைரஸ் உருமாறி வேகமாகப் பரவி வருகிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் போது வைரஸ் வாய் மற்றும் மூக்கில் இருந்தால் மட்டுமே எச்சில் மூலம் மேற்கொள்ளும் பரிசோதனையில் நோயினைக் கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு முழுமையாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டிஜெம் போன்ற பிறப் பரிசோதனைகள் முழுமையாக பலன் தராமல் இருக்கின்றன. எனவே தரமான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறோம். கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களையும் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் பாதிப்பை கண்டறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதலிடம்!

Last Updated : May 24, 2021, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.