இதுதொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஏப்ரல்.7) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் புதிதாக 79 ஆயிரத்து 927 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரத்து 972 நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர், கர்நாடகாவில் இருந்து வந்த 10 நபர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு நபர்கள், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவர் என, 3 ஆயிரத்து 986 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 98 லட்சத்து 45 ஆயிரத்து 778 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் என, 27 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 824 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 546 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 9, அரசு மருத்துமனையில் 8 என, 17 நபர்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் புதிதாக ஆயிரத்து 459 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்றுக்காகச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 685 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 390, கோயம்புத்தூரில் 332, திருவள்ளூர் மாவட்டத்தில் 208, தஞ்சாவூர் மாவட்டத்தில் 108, திருப்பூர் மாவட்டத்தில் 141 நபர்கள் என மேற்கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகளவு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்
சென்னை - 2,57,851
கோயம்புத்தூர் - 61,162
செங்கல்பட்டு - 58,642
திருவள்ளூர் - 47,303
சேலம் - 33,959
காஞ்சிபுரம் - 31,287
கடலூர் - 26,147
மதுரை - 22,364
வேலூர் - 21,838
தஞ்சாவூர் - 20,597
திருவண்ணாமலை - 19,922
திருப்பூர் - 20,001
கன்னியாகுமரி - 17,776
தேனி - 17,408
விருதுநகர் - 17,004
தூத்துக்குடி - 16,721
ராணிப்பேட்டை - 16,658
திருநெல்வேலி - 16,477
திருச்சிராப்பள்ளி - 16,430
விழுப்புரம் - 15,721
ஈரோடு - 15,634
நாமக்கல் - 12,317
திருவாரூர் - 12,472
திண்டுக்கல் - 12,217
புதுக்கோட்டை - 12,031
கள்ளக்குறிச்சி - 11,050
நாகப்பட்டினம் - 9,642
தென்காசி - 8,863
நீலகிரி - 8,816
கிருஷ்ணகிரி - 8,769
திருப்பத்தூர் - 7,939
சிவகங்கை - 7,136
தருமபுரி - 6,899
ராமநாதபுரம் - 6,653
கரூர் - 5,752
அரியலூர் - 4,872
பெரம்பலூர் - 2,326
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 981
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1058
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: சென்னைப் பல்கலை., பட்டமளிப்பு விழா: பங்கேற்பாளர்களுக்குக் கரோனா பரிசோதனை