சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜன.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 258 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 28 ஆயிரத்து 512 பேருக்கும், வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று பேருக்கும் என 28 ஆயிரத்து 515 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 28 ஆயிரத்து 620 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து ஓராயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தனியார் மருத்துவமனையில் 31 பேரும், அரசு மருத்துவமனையில் 22 பேரும் என 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 412 என உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு - ஒரே நேரத்தில் 5 படங்களை வரைந்து அசத்திய ஓவியர்