ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 23,975 பேருக்கு கரோனா

author img

By

Published : Jan 16, 2022, 11:32 PM IST

தமிழ்நாட்டில் இன்று(ஜன.16) 23,975 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

சென்னை: உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்தியாவிலும் நாளொன்றுக்கு சராசரியாக 2.5 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று(ஜன.16) 23,975 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,987 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,866 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,39,923ஆக உள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 12,484 பேர் வீடு திரும்பிஉள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,989ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,36,559 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.