ETV Bharat / city

மீதமுள்ள 35% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்க நீதிமன்றம் அனுமதி...!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால், 75 விழுக்காடு கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 விழுக்காடு கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 18, 2020, 5:56 PM IST

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 விழுக்காட்டை வசூலித்துக் கொள்ளலாம் எனவும், அதில் 40 விழுக்காடு கட்டணத்தை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் எனவும் ஜூலை 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால், 35 விழுக்காடு கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா? என அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (நவம்பர் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் பல்வேறு பள்ளிகள் 40 விழுக்காடு கட்டணம் கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை எனவும், 6 லட்சம் மாணவர்கள், மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளுக்கு சென்று விட்டதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் நிலையில், சில மாணவர்கள் முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணத்தை செலுத்தவில்லை என்றாலும் அவர்களை தொடர்ந்து வகுப்புகளில் சேர்த்து பாடங்கள் நடத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 விழுக்காடு கட்டணத்தில் மீதமுள்ள 35 விழுக்காடு கட்டணத்தை 2021 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து தனியார் பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.