ETV Bharat / city

10 ஆண்டுகள் பணிபுரியாமல் பணி நிரந்தரம் செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - வழக்கு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் உதவியாளராக நியமிக்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் பணிபுரியாமல் பணி நிரந்தரம் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Nov 13, 2020, 2:50 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த 45 இளநிலை உதவியாளர்கள் பணிக்கும், 75 அலுவலக உதவியாளர்கள் பணிக்கும் விண்ணப்பங்களை வரவேற்று 2016ஆம் ஆண்டு விளம்பரம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் 1999ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாகப் பணியாற்றிய எழிலரசன் என்பவர் உள்பட 40 பேர், தங்களைப் பணி நிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இம்மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம், மனுதாரர்கள் 40 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்படாததால் பணி நிரந்தரம் கோர முடியாது எனத் தெரிவித்தது.

மேலும், 2006ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் மட்டும் பணி நிரந்தரம் வழங்கும் வகையில் 2006ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, மனுதாரர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றாததால் அவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க முடியாது எனக் கூறி வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், மனுதாரர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது குறித்து அண்ணா பல்கலைக்கழகம்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.