couple awareness about the vaccine: பூவிருந்தவல்லியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் ஸ்டெல்லா மேரி-விவேக் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
அவ்விழாவில் பங்கேற்க வந்த அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளீர்களா என மணமக்களே கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து முகக்கவத்தை மாலையாக அணிந்து கொண்டு "2 டோஸ் தடுப்பூசி மருந்து, உங்களுக்கு பிரியாணி விருந்து" தடுப்பூசி செலுத்தி ஒமைக்ரானை ஓட விடுவோம்" என வாசகம் எழுதிய பாதகையை ஏந்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனாவை விரட்ட வேண்டும் என மாப்பிள்ளையும் பெண்ணும் வலியுறுத்தினர்.
அவ்விழாவிற்கு வந்த அனைவருக்கும் முகக்கவசத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் இலவசமாக முகக்கவசமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழிசை பற்றி விமர்சனம்: நாஞ்சில் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு