சென்னை: மெட்வே ஹார்ட் இன்ஸ்டியூட்டின் 5ஆவது கிளையைத் தொடங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்கும் முகவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் 11 முகவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஊரடங்கு காலத்தில் தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதலை குறைத்துக் கொண்டதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆவின் நிறுவனம் அதிகளவு பால் கொள்முதல் செய்தது.
அதன் காரணமாக, விற்பனை அளவை விட அதிகமான பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 16 ஆயிரம் டன் பால் பவுடர் கையிருப்பில் உள்ளது. இதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களிடையே நாட்டு மாட்டு பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அதனை பயன்படுத்தி ஆவினில் புதிதாக நாட்டு மாட்டுப் பால் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரிப் பேருந்தை மறித்து டான்ஸ் ஆடிய போதை பாய்ஸ் - கப் ஐஸ் அடித்த போலீஸ்