சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'இப்புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில், எவ்வித முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கக் கோரி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்ததாகவும், விசாணையில் புகாரில் எவ்வித அடிப்படை முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உண்மையான விவசாயிகளுக்கு கடன் தாராளமாகக் கிடைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ