தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையின் சில மண்டலங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 436 பேர் கரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 235 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,729 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னையில் தொற்று பாதித்தோரில், 30 முதல் 39 வயதுடையவர்கள் 18.63 விழுக்காட்டினர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. அடுத்தப்படியாக 20 முதல் 29 வயதுடையவர்கள் 17.79 விழுக்காடு பேரும், 40 முதல் 49 வயதுடையவர்கள் 17.78 விழுக்காடு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
- கோடம்பாக்கம் - 15,351
- அண்ணா நகர் - 15,323
- ராயபுரம் - 13,428
- தேனாம்பேட்டை - 13,137
- தண்டையார்பேட்டை - 11,607
- திரு.வி.க. நகர் - 10,312
- அடையாறு - 10,380
- வளசரவாக்கம் - 8,436
- அம்பத்தூர் - 9,378
- திருவொற்றியூர் - 4,420
- மாதவரம் - 4,810
- ஆலந்தூர் - 4,986
- சோழிங்கநல்லூர் - 3,722
- பெருங்குடி - 4,345
- மணலி - 2,131
இதையும் படிங்க: சென்னையில் இன்று 382 கரோனா பரிசோதனை முகாம்கள்!