சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் மேலும் புதிதாக 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜன.28ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 991 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 ஆயிரத்து 533 நபர்கள் புதிதாக கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 961 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 32 லட்சத்து 79 ஆயிரத்து 284 நபர்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 28 ஆயிரத்து 156 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் 24 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகளும் என 48 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் புதிதாக 5 ஆயிரத்து 246 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 3 ஆயிரத்து 448 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,662 நபர்களுக்கும், சேலத்தில் 1,387 நபர்களுக்கும், திருப்பூரில் 1,779 நபர்களுக்கும், ஈரோட்டில் 1,261 நபர்களுக்கும் அதிகளவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.