ETV Bharat / city

வடசென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா - தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று

வடசென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கரோனா
அதிகரிக்கும் கரோனா
author img

By

Published : Jan 10, 2022, 9:25 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளை விட சென்னையில் அதிகளவு பாதிப்புகள் இருப்பதால் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளையும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. அதில் சென்னை மாநகரின் முதல் ஆறு மண்டலங்களான திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்கள் அடங்கிய வடசென்னை பகுதியிலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்ட பாதிப்பு அறிக்கையின் படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,813 பேருக்கும், குறைந்த பட்சமாக மணலி மண்டலத்தில் 253 பேரும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி 7, 8 ஆம் தேதி நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்பு விகிதம் ராயபுரம் மண்டலத்தில் அதிகமாகவே உள்ளது.

ஆறு மண்டலங்கள்

1. ராயபுரம் மண்டலத்தில், ஜனவரி 7 ஆம் தேதி 1,421 பேருக்கும், ஜனவரி 8ஆம் தேதி 392 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,813 ஆக உள்ளது.

2. தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஜனவரி 7 ஆம் தேதி 1,039 பேருக்கும், ஜனவரி 8 ஆம் தேதி 266 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டு 1305 ஆக உள்ளது.

3. திருவிக நகர் மண்டலத்தில், ஜனவரி 7ஆம் தேதி 971 பேருக்கும், ஜனவரி 8ஆம் தேதி 217 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,188 ஆக உள்ளது.

4. மாதவரம் மண்டலத்தில், ஜனவரி 7ஆம் தேதி 353 பேருக்கும், ஜனவரி 8ஆம் தேதி 121 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 474 ஆக உள்ளது.

5. திருவொற்றியூர் மண்டலத்தில், ஜனவரி 7ஆம் தேதி 306 பேருக்கும், ஜனவரி 8ஆம் தேதி 46 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.

6. மணலி மண்டலத்தில், ஜனவரி 7ஆம் தேதி 182 பேருக்கும், ஜனவரி 8ஆம் தேதி 71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 253 ஆக உள்ளது.

இதில் ஏராளமானோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அறிகுறிகளை பொறுத்து பலர் வீட்டு தனிமையில் இருந்து வருகின்றனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ராயபுரத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையான ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையிலும் கரோனாவிற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய முக்கிய நகரங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.