சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிரமடைந்ததையடுத்து, அங்கிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் பள்ளி விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சீனாவிலிருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவமனைகளில் சீனாவில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கு சளி மற்றும் ரத்தம் எடுக்கப்பட்டு கிங் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இவர்களில் மூவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவருக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொருவருக்கு வேலூர் மருத்துவமனையிலும் பரிசோதனை நடைபெற்றது.
மேலும் ஒருவரிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கிங் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை செய்யப்பட்டுவரும் நபர்களும் சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகள் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படும். இதுவரை சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்தம் 799 நபர்கள் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: