சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 48 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாட்டில் 535 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 22ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 162 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் இருந்த 48 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 183 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 490 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 535 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குணமடைந்த 89 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13ஆயிரத்து 930 உயர்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்கள் யாரும் ஏற்கவில்லை. எனவே, 38 ஆயிரத்து 25 என உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் அதிகபட்சமாக 18 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 6 நபர்களுக்கும் என 48 நபர்களுக்கு வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் நோய் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை’ எனத்தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Video: உரிய பாதுகாப்பு இன்றி சாக்கடையைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்!