வில்லிவாக்கம் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஆலத்தூர் ஊராட்சி சார்பில் தண்டோரா அடித்து வைரஸ் தொற்றைத் தடுக்கும் வழிமுறைகளும், மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் வீதி வீதியாகச் சென்று கைக் கழுவுவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊராட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய உதவி அலுவலர் முரளி, ஊராட்சி செயலாளர் தமிழ் செல்வன், ஊராட்சி தலைவர் வனிதா மேகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.