சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலம் 50 பார்சல்களில் ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டுசென்றனர்.
இந்தத் தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காவிரியில் மருந்துசார் மாசு பொருள்கள் - சென்னை ஐஐடி தகவல்