சென்னை: மாநிலத்தில் 5ஆயிரத்து 337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பாளர்களின் 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 5ஆயிரத்து 337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 உயர்ந்துள்ளது. இன்று கரோனாவால் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5ஆயிரத்து 406 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 377 ஆக பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சென்னையில் 20ஆவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 57ஆயிரத்து 614ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று 82 ஆயிரத்து 928 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 64 லட்சத்து 36 ஆயிரத்து 700 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 46 ஆயிரத்து 350 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மற்றும் சென்னையில் தலா ஒரு தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 176 பரிசோதனை மையங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு
வரிசை எண் | மாவட்டம் | பாதிப்பு |
1 | சென்னை | 1,57,614 |
2 | செங்கல்பட்டு | 33,030 |
3 | திருவள்ளூர் | 30,582 |
4 | கோயம்புத்தூர் | 27,157 |
5 | காஞ்சிபுரம் | 20,803 |
6 | கடலூர் | 18,534 |
7 | மதுரை | 16,024 |
8 | சேலம் | 17,081 |
9 | தேனி | 14,377 |
10 | விருதுநகர் | 14,108 |
11 | திருவண்ணாமலை | 14,437 |
12 | வேலூர் | 13,746 |
13 | தூத்துக்குடி | 13,016 |
14 | ராணிப்பேட்டை | 12,783 |
15 | திருநெல்வேலி | 11,989 |
16 | கன்னியாகுமரி | 11,960 |
17 | விழுப்புரம் | 10,616 |
18 | திருச்சி | 9,746 |
19 | தஞ்சாவூர் | 9,650 |
20 | கள்ளக்குறிச்சி | 8,832 |
21 | திண்டுக்கல் | 8,505 |
22 | புதுக்கோட்டை | 8,343 |
23 | தென்காசி | 6,915 |
24 | ராமநாதபுரம் | 5,401 |
25 | திருவாரூர் | 6,310 |
26 | திருப்பூர் | 6,589 |
27 | ஈரோடு | 5,764 |
28 | சிவகங்கை | 4,878 |
29 | நாகப்பட்டினம் | 4,860 |
30 | திருப்பத்தூர் | 4,440 |
31 | நாமக்கல் | 4,355 |
32 | கிருஷ்ணகிரி | 3928 |
33 | அரியலூர் | 3,537 |
34 | நீலகிரி | 3,178 |
35 | கரூர் | 2,683 |
36 | தருமபுரி | 2,988 |
37 | பெரம்பலூர் | 1,676 |