சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்.22) கடந்த 24 மணி நேரத்தில் 2757 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 21 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
மீண்டும் புதிதாகப் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று ஏப்.22ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 17 ஆயிரத்து 997 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 57 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 48 லட்சத்து 41 ஆயிரத்து 401 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பைக் கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், கிட்டத்தட்ட 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 நபர்களுக்குக் கரோனா தொற்றுப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சிகிச்சையில் உள்ளவர்கள்: அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 286 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 136 என உயர்ந்துள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 155 என உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 40 நபர்களும் கோயம்புத்தூரில் 15 நபர்களும் என 686 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாகப் பாதிப்பு: குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேருக்கும், மதுரை மற்றும் திருநெல்வேலியில் 2 பேருக்கும், தூத்துக்குடி, திருவாரூர், திருவள்ளூர், தென்காசி, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் என 57 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பினை மூன்றாவது அலையில் கட்டுப்படுத்தி தொடர்ந்து, குறைந்து கொண்டே வந்தநிலையில், சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதி மீண்டும் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஐஐடியில் செய்யப்பட்ட பரிசோதனையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது’ எனத் தகவல் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா!- மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு