சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பாக நகரும் காய்கறி வாகனம் மற்றும் கோயம்பேடு வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுரங்கப்பாதை கிருமி நாசினி தெளிப்பான் ஆகியவற்றை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காய்கறிகளின் விலை கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 அல்லது அதற்கு மேலும் உள்ள குடியிருப்புகளைக் கொண்ட குடியிருப்பு நிலங்கள், சங்கங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழும www.cmdachennai.gov.in என்ற இணையதளத்தில் ரூபாய் 750 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் அல்லது 9025653376 மற்றும் 24791133 என்ற அலைபேசி எண்களுக்கு அழைப்பு விடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். 5 நாட்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஸ்விகி, சொமேட்டோ மற்றும் வினவு போன்ற நிறுவனங்கள் மூலமாகவும் அங்காடி நிர்வாகக் குழு நிர்ணயித்த விலையில் காய்கறி தொகுப்பை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு