சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 18 ஆயிரத்து 23 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குணமடைந்த 31 ஆயிரத்து 45 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், தனிமைப்படுத்த மையங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 764 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கு உரிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம்18 ஆயிரத்து 22 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 18 ஆயிரத்து 23 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது.
இதுவரை 2 கோடியே 83 லட்சத்து 48 ஆயிரத்து 829 பேர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் 22 லட்சத்து 74ஆயிரத்து 704 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 31 ஆயிரத்து 45 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 28 ஆயிரத்து 344 என உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 150 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 259 நோயாளிகளும் என 409 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 765 என உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 1,437 என குறைந்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து 16 ஆயிரத்து 709 ஆக உள்ளது. கோயம்புத்தூரில் புதிதாக 2,439 நபர்களுக்கும், ஈரோட்டில் 1,596 நபர்களுக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனை, தனிமைப்படுத்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 751 பேர் உள்ளனர். அதற்கடுத்து திருப்பூர் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 969 நபர்களும், சென்னையில் 16 ஆயிரத்து 709 பேரும், ஈரோட்டில் 14 ஆயிரத்து 284 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 558 நபர்களும் என அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு;
சென்னை: 5,19,574
கோயம்புத்தூர்: 1,93,037
செங்கல்பட்டு: 1,47,996
திருவள்ளூர் : 1,05,744
சேலம் : 74,297
மதுரை : 68,684
காஞ்சிபுரம்: 66,589
திருப்பூர் : 70,213
திருச்சிராப்பள்ளி : 62,822
ஈரோடு : 69,485
கடலூர் : 53,029
கன்னியாகுமரி : 54,154
தூத்துக்குடி : 50,783
தஞ்சாவூர் : 54,580
திருநெல்வேலி : 45,474
வேலூர் : 44,433
திருவண்ணாமலை : 44,671
விருதுநகர் : 41,223
தேனி : 39,589
ராணிப்பேட்டை : 37,292
விழுப்புரம் : 38,480
கிருஷ்ணகிரி : 35,729
நாமக்கல் : 37,987
திண்டுக்கல் : 29,303
திருவாரூர் : 33,675
நாகப்பட்டினம் : 33,550
புதுக்கோட்டை : 24,811
திருப்பத்தூர் : 25,308
தென்காசி: 24,546
கள்ளக்குறிச்சி : 23,539
நீலகிரி : 23,370
தருமபுரி : 21,165
ராமநாதபுரம் : 18,188
கரூர் : 19,784
சிவகங்கை : 15,709
அரியலூர் : 13,039
பெரம்பலூர் : 9,883
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் : 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் : 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் : 428
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது!