சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 19 ஆயிரத்து 448 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 31 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 351 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை இன்று(ஜூன்.7)வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 385 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 446 நபர்களுக்கும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 19 ஆயிரத்து 448 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறிய பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 81 லட்சத்து 89 ஆயிரத்து 65 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 22 லட்சத்து 56 ஆயிரத்து 681 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 31,360 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 என உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 103 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 248 நோயாளிகளும் என 351 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 356 என உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக 1,530 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று(ஜூன்.7) மட்டும் 40 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். மருத்துவமனைகளில் 19 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கோயம்புத்தூரில் 2,564 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 26 பேர் இறந்துள்ளனர். 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஈரோட்டில் 1,646 நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் இறந்துள்ளனர். திருப்பூரில் 1,027 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு;
- சென்னை: 5,18,162
- கோயம்புத்தூர் : 1,90,593
- செங்கல்பட்டு : 1,47,209
- திருவள்ளூர் : 1,05,342
- சேலம் : 73,769
- மதுரை : 68,324
- காஞ்சிபுரம் : 66,304
- திருப்பூர் : 69,211
- திருச்சிராப்பள்ளி : 62,347
- ஈரோடு : 67,905
- கடலூர் : 52,558
- கன்னியாகுமரி : 53,667
- தூத்துக்குடி : 50,502
- தஞ்சாவூர் : 53,803
- திருநெல்வேலி : 45,287
- வேலூர் : 44,154
- திருவண்ணாமலை : 44,331
- விருதுநகர் : 40,881
- தேனி : 39,332
- ராணிப்பேட்டை : 36,962
- விழுப்புரம் : 38,035
- கிருஷ்ணகிரி : 35,462
- நாமக்கல் : 37,444
- திண்டுக்கல் : 29,108
- திருவாரூர் : 33,355
- நாகப்பட்டினம் : 33,105
- புதுக்கோட்டை : 24,619
- திருப்பத்தூர் : 25,082
- தென்காசி : 24,348
- கள்ளக்குறிச்சி : 23,285
- நீலகிரி : 22,872
- தருமபுரி : 20,921
- ராமநாதபுரம் : 18,081
- கரூர் : 19,589
- சிவகங்கை : 15,569
- அரியலூர் : 12,892
- பெரம்பலூர் : 9,764
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,004
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,075
- ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க: அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி!