இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் மேலும் புதிதாக 52 ஆயிரத்து 196 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தமிழகத்திலிருந்த 451 பேருக்கும், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கும் என, 454 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 4 பேரும், அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும் பலனின்றி இன்று இறந்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து இதுவரை தமிழகம் திரும்பிய 31 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மேலும் மூன்று நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலிருந்து வந்த 11 நபர்களுக்கு உருமாறிய கரோனா வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் எனவும், மூன்று பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைத்த 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்!