சென்னை: தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும். தற்போது திறக்கலாமா அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் திறக்கலாமா என்பது குறித்தும் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து முதலமைச்சரிடம் நாளை விரிவான அறிக்கையை கொடுக்க உள்ளோம். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டால், மாநிலத்தில் 83 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.