ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 2146 பேருக்கு தொற்று உறுதி! - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Corona update
Corona update
author img

By

Published : Nov 10, 2020, 6:53 PM IST

Updated : Nov 10, 2020, 8:35 PM IST

18:51 November 10

தமிழ்நாட்டில் மேலும் 2146 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 10) புதிதாக 2146 கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 709ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 71 ஆயிரத்து 511 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் மூலம் புதிதாக 2146 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டில் ஒரு கோடி 4 லட்சத்து 32 ஆயிரத்து 314 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 7 லட்சத்து 48 ஆயிரத்து 255 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர்களில் தற்போது 18 ஆயிரத்து 709 பேர் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த மேலும் 2237 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 18 ஆயிரத்து 129ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும் அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் என 25 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை:

சென்னை - 2,06,024

கோயம்புத்தூர் - 45,492

செங்கல்பட்டு - 45,122

திருவள்ளூர் - 39,100

சேலம் - 28,393

காஞ்சிபுரம் - 26,358

கடலூர் - 23,609

மதுரை - 19,136

வேலூர் - 18,453

திருவண்ணாமலை - 18,081

தேனி - 16,385

தஞ்சாவூர் - 15,836

விருதுநகர் - 15,601

தூத்துக்குடி - 15,375

கன்னியாகுமரி - 15,288

ராணிப்பேட்டை - 15,173

திருநெல்வேலி - 14,475

விழுப்புரம் - 14,157

திருப்பூர் - 13,886

திருச்சிராப்பள்ளி - 12,884

ஈரோடு - 11,274

புதுக்கோட்டை - 10,840

கள்ளக்குறிச்சி - 10,441

திண்டுக்கல் - 9,964

திருவாரூர் - 10,018

நாமக்கல் - 9651

தென்காசி - 7901

நாகப்பட்டினம் - 7068

திருப்பத்தூர் - 6920

நீலகிரி - 7000

கிருஷ்ணகிரி - 6894

ராமநாதபுரம் - 6092

சிவகங்கை - 6072

தருமபுரி - 5800

அரியலூர் - 4472

கரூர் - 4445

பெரம்பலூர் - 2210

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : Nov 10, 2020, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.