இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 62 ஆயிரத்து 409 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 667 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 5 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் என 673 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 898 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை, அதன்மூலம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 287 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 6 ஆயிரத்து 653 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், குணமடைந்த 821 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் பலனளிக்காமல் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தலா மூவர் என ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 242ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,28,368
கோயம்புத்தூர் - 53,331
செங்கல்பட்டு - 50,710
திருவள்ளூர் - 43118
சேலம் - 32065
காஞ்சிபுரம் - 29004
கடலூர் - 24,819
மதுரை - 20761
வேலூர் - 20494
திருவண்ணாமலை - 19266
தேனி - 16986
தஞ்சாவூர் - 17440
திருப்பூர் - 17455
விருதுநகர் - 16472
கன்னியாகுமரி - 16607
தூத்துக்குடி - 16184
ராணிப்பேட்டை - 16022
திருநெல்வேலி - 15438
விழுப்புரம் - 15087
திருச்சிராப்பள்ளி - 14439
ஈரோடு - 14030
புதுக்கோட்டை - 11483
கள்ளக்குறிச்சி - 10843
திருவாரூர் - 11047
நாமக்கல் - 11421
திண்டுக்கல் - 11,086
தென்காசி - 8332
நாகப்பட்டினம் - 8302
நீலகிரி - 8078
கிருஷ்ணகிரி - 7980
திருப்பத்தூர் - 7521
சிவகங்கை - 6593
ராமநாதபுரம் - 6370
தருமபுரி - 6515
கரூர் - 5305
அரியலூர் - 4660
பெரம்பலூர் - 2259
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 938
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1030
ரயில் மூலம் வந்தவர்கள் - 428