சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 5) மேலும் 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 5,861 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 9 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 697ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 52 லட்சத்து 12 ஆயிரத்து 534 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை - 965
- செங்கல்பட்டு -293
- திருவள்ளூர் - 244
- மதுரை- 99
- காஞ்சிபுரம் - 152
- விருதுநகர் - 118
- தூத்துக்குடி - 47
- திருவண்ணாமலை - 239
- வேலூர் - 165
- திருநெல்வேலி - 127
- தேனி - 79
- ராணிப்பேட்டை -109
- கன்னியாகுமரி - 77
- கோயம்புத்தூர் - 545
- திருச்சி - 108
- கள்ளக்குறிச்சி - 133
- விழுப்புரம் - 145
- சேலம் - 250
- ராமநாதபுரம் - 20
- கடலூர்- 434
- திண்டுக்கல் - 122
- தஞ்சாவூர் - 114
- சிவகங்கை - 34
- தென்காசி - 60
- புதுக்கோட்டை - 126
- திருவாரூர் - 112
- திருப்பத்தூர் - 44
- அரியலூர் - 66
- கிருஷ்ணகிரி -88
- திருப்பூர் -196
- தருமபுரி - 50
- நீலகிரி - 47
- ஈரோடு - 141
- நாகப்பட்டினம் -169
- நாமக்கல் -86
- கரூர் -44
- பெரம்பலூர் -20
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 2
இதையும் படிங்க: விதிமுறை எங்கே? - கடைக்குச் சீல்வைப்பு