இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் 66 ஆயிரத்து 634 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 551 நபர்களுக்கும், பங்களாதேஷில் இருந்து வந்த இருவருக்கும், கேரளா, அஸ்ஸாம், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கும் என ஆயிரத்து 557 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்து 86 ஆயிரத்து 69 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், 7 லட்சத்து 73 ஆயிரத்து 176 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 875 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1910 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 10 பேர் என 17 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 639ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்பட வில்லை. தற்போது, ஒருவர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் அரியலூர் மாவட்டத்தில் இருவருக்கும் என குறைந்தளவில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் அதிகபட்சமாக சென்னையில் 4299 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,12,970
கோயம்புத்தூர் - 47,823
செங்கல்பட்டு - 47,072
திருவள்ளூர் - 40,501
சேலம் - 29,418
காஞ்சிபுரம் - 27,375
கடலூர் - 24,080
மதுரை - 19,565
வேலூர் - 19,128
திருவண்ணாமலை - 18,502
தேனி - 16,532
தஞ்சாவூர் - 16,256
விருதுநகர் - 15,800
தூத்துக்குடி - 15,588
கன்னியாகுமரி - 15,577
ராணிப்பேட்டை - 15,522
திருநெல்வேலி - 14,727
விழுப்புரம் - 14,513
திருப்பூர் - 14,962
திருச்சிராப்பள்ளி - 13,269
ஈரோடு - 12,049
புதுக்கோட்டை - 11,054
கள்ளக்குறிச்சி - 10,619
திண்டுக்கல் - 10,148
திருவாரூர் - 10,355
நாமக்கல் - 10,225
தென்காசி - 8011
நாகப்பட்டினம் - 7506
திருப்பத்தூர் - 7173
நீலகிரி - 7293
கிருஷ்ணகிரி - 7290
ராமநாதபுரம் - 6183
சிவகங்கை - 6248
தருமபுரி - 5987
அரியலூர் - 4537
கரூர் - 4733
பெரம்பலூர் - 2233
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 926
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 998
ரயில் மூலம் வந்தவர்கள் - 428