மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆக. 17) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 85 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஆயிரத்து 804 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 225 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
- குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 632 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 10 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 22 நோயாளிகளும் என மொத்தம் 32 நபர்கள் இன்று இறந்துள்ளனர். இதன் மூலம்
- கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 579 என உயர்ந்துள்ளது.
- புதிதாக 209 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் 1.2 விழுக்காடு என்ற அளவில் உள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
- சென்னை - 5,41,616
- கோயம்புத்தூர் - 2,33,228
- செங்கல்பட்டு - 1,63,945
- திருவள்ளூர் - 1,14,891
- சேலம் - 95,065
- திருப்பூர் - 89,268
- ஈரோடு - 96,592
- மதுரை - 73,820
- காஞ்சிபுரம் - 72,342
- திருச்சிராப்பள்ளி - 73,607
- தஞ்சாவூர் - 69,643
- கன்னியாகுமரி - 60,627
- கடலூர் - 61,614
- தூத்துக்குடி - 55,327
- திருநெல்வேலி - 48,248
- திருவண்ணாமலை - 52,861
- வேலூர் - 48,511
- விருதுநகர் - 45,667
- தேனி - 43,096
- விழுப்புரம் - 44,376
- நாமக்கல் - 48,105
- ராணிப்பேட்டை - 42,297
- கிருஷ்ணகிரி - 41,795
- திருவாரூர் - 38,556
- திண்டுக்கல் - 32,372
- புதுக்கோட்டை - 28,724
- திருப்பத்தூர் - 28,449
- தென்காசி - 26,965
- நீலகிரி - 31,307
- கள்ளக்குறிச்சி - 29,733
- தர்மபுரி - 26,540
- கரூர் - 22,931
- மயிலாடுதுறை - 21,517
- ராமநாதபுரம் - 20,138
- நாகப்பட்டினம் - 19,240
- சிவகங்கை - 19,140
- அரியலூர் - 16,138
- பெரம்பலூர் - 11,617
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,020
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428