ETV Bharat / city

'கரோனாவே தொலைந்து போ' - தீவிரமாகும் நடவடிக்கைகள் - Corona action at Madipakkam bus stand

சென்னை: கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பேருந்து நிலையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்தில் கரோனா நடவடிக்கை
பேருந்து நிலையத்தில் கரோனா நடவடிக்கை
author img

By

Published : Mar 21, 2020, 9:24 AM IST

சென்னையில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்களின் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் லக்கேஜ் ட்ராலிகளுக்கு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை

இப்பணிகள் தொடந்து நடைபெற வேண்டும் என மாநகராட்சி ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்தடுத்த பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் பிற நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளபடும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.