ETV Bharat / city

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற ஹோமியோபதி மருத்துவரின் பிணை மனு தள்ளுபடி! - Villupuram Homeopathy doctor Mahender

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த விழுப்புரம் ஹோமியோபதி மருத்துவர் மகேந்தர் என்பவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC
Madras HC
author img

By

Published : May 13, 2021, 7:08 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தினர், மே.7ஆம் தேதி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரெம்டெசிவர் மருந்து 6 குப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த ஆய்வாளர் வாகனத்தில் வந்த ஆனந்த் பாலாஜி என்பவரை கைது செய்தார்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்த 24 வயதான ஹோமியோபதி மருத்துவர் மகேந்தர் என்பவரிடமிருந்து, ஒரு குப்பி தலா ரூ.10 ஆயிரம் என கொடுத்து வாங்கி, ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் ஆனந்த் பாலாஜியை கைது செய்த நிலையில், டாக்டர் மகேந்தரை தேடி வந்தனர். இந்தநிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மகேந்தர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் டி. சண்முகராஜேஸ்வரன் ஆஜரானார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளதாலும், தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் இவரது செயல் மோசமானது என்பதாலும், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரெம்டெசிவிர் கள்ளச்சந்தை விற்பனை வழக்கில் முன்ஜாமீன் கோரிய மருத்துவர் மகேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.