ETV Bharat / city

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி, உரிய நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன் - Continuing mess in medical student admissions

சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடப்பதாகவும், அதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி, உரிய நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன்

author img

By

Published : Nov 18, 2020, 10:20 PM IST

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாடு பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இடம்பெற்றிருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த 34 மாணவர்களையும் இனி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கமுடியாதபடி கேட்டுக்கொள்கிறோம்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்க முடியாது என மறுத்துவரும் பாஜக அரசு ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களித்து 'இனிசெட்' என்று தனியே அவற்றுக்கு நுழைத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாட்டு அரசுக்கு பாஜக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

பாஜக அரசின் துரோகம் போதாதென்று இப்போது வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தரவரிசைப் பட்டியலில் தெலங்கானா தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 34 பேர் இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய எம்பிபிஎஸ் இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரை வார்த்துத் தரவேண்டும்?

ஏற்கெனவே, மத்திய தொகுப்புக்கு 15% இடங்களை அள்ளிக்கொடுத்துவிட்டு மிச்சமிருப்பதிலும் பிற மாநில மாணவர்களைச் சேர அனுமதிப்பது நமது மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு வஞ்சகம் செய்வதாகாதா?

மருத்துவப்படிப்பு சேர்க்கையில் எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு குடியிருப்புச் சான்றிதழ் மட்டுமின்றி, 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை, தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இடம் எனத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மனுதர்மத்திற்கு எதிரான போராட்டம்: திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.