இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சைதாப்பேட்டை, ராயபுரம் உள்பட சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்க்க ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2003ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும், சட்டப்பேரவை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து புதிய
வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-Aஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 16.11.2020 முதல் 15.12.2020 முடிய உள்ள காலத்துக்குள் விண்ணப்பிக்கவும், 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கவும். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பெறப்படவுள்ள உரிமை கோரல் மற்றம் ஆட்சேபனைகள் குறித்த படிவங்கள் 6, 7, 8 மற்றும் 3A முறையே படிவம் 9, 10, 11 மற்றும் 11A ஆகியவற்றில் பதியப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் / மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய அலுவலகங்களின் அறிவிப்பு பலகையிலும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரின் இணையதளத்திலும் (http://www.elections.tn.gov.in/SSR2021.aspx) வாரத்துக்கு ஒரு முறை விளம்பரப்படுத்தப்படும். இதன் பேரில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் பதிவு அலுவலர் / மண்டல அலுவலரை சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அணுகவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.